அரசுப் பள்ளிகளிலும், கற்பித்தல் திறன் மற்றும் கற்றல் திறன் தொடர்பான சிறப்புக்குழு அமைக்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Jul 22 2019 6:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக்குழு அமைக்க வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், குலவைப்பட்டி நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில், அதற்கான ஆணையைப் பெற பெற அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும், அதனை தர மறுத்ததால், தன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சம்மந்தப்பட்ட ஆசிரியை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியை பாடமெடுத்த வகுப்புகளில் அடிப்படை கேள்விகளுக்கு கூட மாணவ மாணவிகளுக்கு பதிலளிக்க தெரியாததாலேயே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முறையாக சோதித்தறிய வேண்டுமென நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்களது அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் ஆசிரியர்களின் கற்பித்தல் சிறப்பானதாகவும், பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த வழக்கை பொறுத்தவரை அடிப்படையான கேள்விகளுக்கு கூட மாணவர்கள் பதில் அளிக்காததால், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டார். தொடக்கக் கல்வியில் மாணவர்கள் அடிப்படை திறன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதில் தவறும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00