பெரம்பலூரில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால், பெண் உட்பட இரண்டு பேர் தீக்குளிக்‍க முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவங்களால் பரபரப்பு

Jul 24 2019 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால், பெண் உட்பட இரண்டு பேர் தீக்குளிக்‍க முயன்ற சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பேரூராட்சியை சேர்ந்த சதாசிவம் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த பாஷா என்பவரிடம், தனது 16 சென்ட் நிலத்தை அடமானமாக வைத்து 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். வறுமையின் காரணமாக பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால், முதியவர் சதாசிவத்தை மிரட்டி, அதிக மதிப்புடைய இடத்தை பாஷா பத்திரப்பதிவு செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சதாசிவம், ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சியை சேர்ந்த தமிழரசி என்ற பெண்ணுக்‍கு, அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை, அதே ஊரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்துகொண்டார். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்‍கை எடுக்‍காததால், மனமுடைந்த தமிழரசி, ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அம்மாவின் பொற்கால ஆட்சியில் புகார் மனுக்கள் மீதான நடவடிக்கை மற்றும் தீர்வு காண்பதில் இரண்டாவது இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தில், தற்போது அதிகாரிகளின் அலட்சியத்தால் உரிய நடவடிக்கை எடுக்‍கப்படவில்லை. இதனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 பேர் மனமுடைந்து, ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00