தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை

Jul 24 2019 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய களப் பணிகள் குறித்து ஆலோசிக்‍கப்பட்டது.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில், வரும் 27-ஆம் தேதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மத்திய மாவட்டத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம், மத்திய மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ஏ.ஜி.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. திரு. டிடிவி தினகரனுக்‍கு, கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது குறித்து இந்தக்‍ கூட்டத்தில் ஆலோசிக்‍கப்பட்டது. மத்திய மாவட்ட அவைத்தலைவர் திரு. சண்முகசுந்தரம், நகரக்‍ கழகச் செயலாளர் திரு. குருஏழுமலை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை புறநகர் தெற்கு கல்லுபட்டி ஒன்றிய கழக சார்பில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், எடப்பாடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வீடுவீடாகச் சென்று பொதுமக்‍களிடம் எடுத்துரைப்பது குறித்தும், இளைஞர்கள், பெண்களை அதிக அளவில் கழகத்தில் உறுப்பினர்களாக இணைப்பது, உள்ளாட்சி தேர்தலில் ஆற்றவேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், அம்மா பேரவை செயலாளர் திரு.செல்வம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், நாகர்கோவில் நகர கழகம் சார்பில் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கே.டி. பச்சைமால் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். மாநில அம்மா பேரவை துணைச் செயாலாளர் திரு. லட்சுமணன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கடவூர் வடக்கு, கடவூர் தெற்கு உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட அவைத் தலைவர் ஆரியூர் திரு. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக்‍ கூட்டத்தில், எடப்பாடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பொதுமக்‍களிடம் எடுத்துரைப்பது, கழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது, உள்ளாட்சி தேர்தலில் ஆற்றவேண்டிய களப் பணிகள் குறித்தும் ஆலோசிக்‍கப்பட்டது. மாவட்ட கழகச் செயலாளர் திரு. பி.எஸ்.என். தங்கவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00