ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Aug 2 2019 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த வினோத் என்ற ரயில்வே காவலர், கடந்த 2014-ம் ஆண்டு முத்துநகர் விரைவு ரயிலில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மது போதையில் தகாத முறையில் பேசியதாக பெண் பயணி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வினோத்தை பணியிடை நீக்கம் செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி, வினோத் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய காவலரே, பெண் பயணிக்கு தொந்தரவு அளித்தது மன்னிக்க முடியாத குற்றம் என கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட காவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், ஆனால் துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். வேலைவாய்ப்பு காரணமாக, பெண்கள் இரவு நேரங்களில் தனியே பயணம் செய்வதை தவிர்க்க முடியாது எனவும், எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் எனவும் தெரிவித்தார். மனுதாரரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிபதி, ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00