வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

Aug 2 2019 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷாலுக்‍கு பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்‍கு சொந்தமாக செயல்படும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்‍கு வழங்கிய சம்பளத்தில் வரிப்பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த தொகையை, விஷால் குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரித்துறைக்‍கு செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விஷாலுக்‍கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் அளிக்‍கவில்லை.

இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில், எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் மீது உரிய நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி வழக்‍கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, நடிகர் விஷால் ஆஜராகாததால், அவருக்‍கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00