தூத்துக்‍குடிக்‍கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் - நீண்ட விசாரணைக்‍கு பின்னர் நடவடிக்‍கை

Aug 3 2019 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடிக்கு, கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர், நீண்ட விசாரணைக்குப்பின் மீண்டும் மாலத்தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாலத்தீவிற்கு கருங்கல் ஏற்றிச்சென்ற விர்கோ கப்பல், மீண்டும் தூத்துக்குடி திரும்பியபோது, கப்பலில் இருந்த 9 ஊழியர்களுடன் கூடுதலாக ஒருவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மத்திய-மாநில உளவுத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 100 கடல்மைல் தொலைவில் அந்தக் கப்பலை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த 10ஆவது நபரின் பெயர் அகமது அதீப் என்பதும், அவர், மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் என்பதும் தெரியவந்தது. உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்திருந்த வெளிநாட்டினர் பதிவு அதிகாரிகளும், நேற்று விசாரணை நடத்தினர். அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பை, அதே கப்பலில், மீண்டும் மாலத்தீவிற்கு அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00