முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, வேலை வாய்ப்பு அலுவலம் மூலம் தனியார் துறைகளில் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் : ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு

Sep 28 2013 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா உத்தரவின்படி, சென்னையில் இன்று தனியார்துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. விற்பனை பிரதிநிதிகள், விளம்பர பிரதிநிதிகள் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முகாமில், நேர்முகத் தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கவிதா, பணி ஆணைகளை வழங்கினார். தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு, பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று விழுப்புரத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் திரு.சம்பத் தொடங்கி வைத்தார். இதில், இன்சூரன்ஸ், செக்யூரிட்டி, மருந்து, ஜவுளி, வங்கிகள் என 10-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர். விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் இம்முகாமில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • Mannan Magal

    Mon - Fri : 20:30

  • SONNATHU NEETHANAE

    Mon - Fri : 19:00

  • Sri Durga Devi

    Sun : 11:00

  • Kaalabairavan

    Mon - Fri : 18:30

  • Chithiram Pesudadi

    Mon - Fri : 21:00

  • Adhae Kangal

    Mon - Fri : 22:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2802.00 Rs. 2997.00
மும்பை Rs. 2786.00 Rs. 2950.00
டெல்லி Rs. 2763.00 Rs. 2926.00
கொல்கத்தா Rs. 2777.00 Rs. 2938.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 45.70 Rs. 42715.00
மும்பை Rs. 45.70 Rs. 42715.00
டெல்லி Rs. 45.70 Rs. 42715.00
கொல்கத்தா Rs. 45.70 Rs. 42715.00