உடல் நலக்குறைவால், பாதிக்கப்பட்டிருந்த நாங்குனேரி வானுமாமலை ஜீயர் சுவாமிகள் மரணம் - ஏராளமான பக்தர்கள் அஞ்சலி

May 1 2014 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாங்குனேரி வானமாமலை பெருமாள்கோயில் ஜீயர் சுவாமி முக்தியடைந்தார். இன்று காலை, சுவாமியின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை மாவட்டம், நாங்குனேரி வானமாமலை பெருமாள் கோவில் மடத்தின் 30-வது மடாதிபதியாக இருந்தவர், ஸ்ரீகலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர். 82 வயதான அவர், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், நேற்றுமாலை முக்தியடைந்தார். நாங்குனேரி ஜீயர் மடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஜீயர் சுவாமியின் உடலுக்கு இன்றுகாலை சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல், ஜீயர் சுவாமியின் உடல் தேரில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, நாங்குனேரியில் உள்ள திருவரசுவில் ஜீவசமாதியாக வைக்கப்படுகிறது. ஜீயர் சுவாமியின் மறைவையடுத்து, நாங்குனேரி வானமாமலை பெருமாள் கோவில் மடத்தின் புதிய மடாதிபதியாக, மதுரகவி வானமாமலை ராமனுஜ ஜீயர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜீயர் மறைவுக்கு இரங்கல்

மிகவும் பழமைவாய்ந்த நாங்குநேரி ஸ்ரீவானமாமலை ஜீயர் மடத்தின் ஜீயர் சுவாமிகள் கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர், ஆசார்யன் திருவடியில் முக்தி அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். ஜீயரை இழந்துவாடும் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தின் சிஷ்ய பெருமக்களுக்கும், மடத்தின் பணியாளர்களுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் முதலமைச்சர் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மிகவும் பழமை வாய்ந்த நாங்குநேரி ஸ்ரீவானமாமலை ஜீயர் மடத்தின் ஜீயர் சுவாமிகள் கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் நேற்று நாங்குநேரி மடத்தில் ஆசார்யன் திருவடியில் முக்தி அடைந்தார் என்ற செய்தியை அறிந்து தாம் மிகுந்த வருத்தம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். வானமாமலை ஜீயர் மடத்தின் 30-வது ஜீயர் சுவாமியாக 1994-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்- சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்ற கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளில் சிறு கதைகளையும், கவிதைகளையும் இயற்றிய பெருமைக்குரியவர் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆன்மீகத்தை பரப்பியதோடு மட்டுமல்லாமல், நாங்குநேரியை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, மடத்திற்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக வழங்கிய பெருமை இவரையே சாரும்- உலகப் புகழ் பெற்ற தமிழ் இலக்கியமான திருக்குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்த சிறப்பினைப் பெற்ற இவர், அதில் பொதிந்துள்ள கருத்துகளை நாளும் தவறாது பின்பற்றுமாறு அனைவரையும் வலியுறுத்தி வந்தார்- பல்வேறு வேத புத்தகங்களை எழுதிய கலியன் வானமாமலை ஜீயரிடம் தீட்சை பெற்ற பல மடாதிபதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆன்மிகப் பணியாற்றி வருகின்றனர் - கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயரை இழந்து வாடும் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தின் சிஷ்ய பெருமக்களுக்கும், மடத்தின் பணியாளர்களுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயரின் ஆன்மா ஆசார்யன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00