மதுரை பேருந்து நிலையங்களுக்‍கும் ஜல்லிக்‍கட்டு மைதானத்திற்கும் வந்த வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி - வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை

Jan 14 2020 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியிலும் முக்‍கிய பேருந்து நிலையங்களிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்‍கட்டு போட்டிகளுக்‍கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் அவனியாபுரம் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு வைக்‍கப்பட்டிருப்பதாக, சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் வந்தது. இதனையடுத்து, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பேருந்துகளிலும் சோதனை நடத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தில் முக்‍கிய ஜல்லிக்‍கட்டு போட்டிகளுக்‍கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்‍கப்பட்டிருப்பது மக்‍கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது,
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00