அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனு - உச்சநீதிமன்றத்தில் நாளை அவசர வழக்‍காக விசாரணை

Jan 14 2020 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை அவசர வழக்‍காக விசாரிக்‍கப்படவுள்ளது.

அவனியாபுரத்தில், கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விழாக்‍குழு தலைவராக ஒருவரே இருப்பதாவும், அதனால் போட்டி நடத்துவதில் முறைகேடுகள் நடப்பதாவும், எனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்கள் சார்பில், அனைத்து தரப்பினரும் அடங்கிய விழாக் குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்‍கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு நடத்த உத்தரவிட்டனர். அக்குழுவில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இடம்பெறுவர் என தெரிவித்தனர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவே, ஜல்லிக்‍கட்டை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை அவசர வழக்‍காக விசாரிக்‍கப்படவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00