கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நீடிக்கும் அவலம் - முதலுதவி மையம் இல்லாததால் உயிரிழந்த பயணி : நீண்டகாலமாக அவலம் நீடிப்பதாக பொதுமக்கள் வேதனை

Jan 14 2020 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில், மருத்துவ முதலுதவி மையம் இல்லாத அவல நிலை நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்‍காக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்‍கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை குரேம்பேட்டை பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது அருகிலிருந்த பொதுமக்கள் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கொடுத்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு 108 ஆம்புலன்ஸ் வந்த நிலையில், மருத்துவர் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். நாள்தோறும் ஆயிரக்‍கணக்‍கான மக்கள் வந்து செல்லக்கூடிய மிகப்பெரிய பேருந்து நிலையத்தில், முதலுதவிக்குகூட மருத்துவ சேவை மையம் இல்லாத அவநிலை தொடர்ந்து நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00