சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு - குழந்தையை கடத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை

Jan 14 2020 7:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார், குழந்தையை கடத்திய தீபக்‍ மண்டல் என்பவனை கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜீனா என்பவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 12-ம் தேதி இரவு தனது 2 வயது பெண் குழந்தை ரஷிதாவுடன் உறங்கி கொண்டிருந்தார். உறக்‍கத்திலிருந்து எழுந்த மஜீனா, குழந்தை காணாமல்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை உடனடியாக ஆய்வு செய்த போலீசார், மேற்குவங்கத்தை சேர்ந்த தீபக் மண்டல் என்பவன் குழந்தையை தூக்கிச் சென்றதை உறுதி செய்தனர்.

குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குழந்தை ர‌ஷிதாவை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர். குழந்தையை கடத்திய தீபக் மண்டலிடம், போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை சென்ட்ரல் ரயில்வே போலீசார் மூலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்‍கப்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும், காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட 243 குழந்தைகளை ரயில்வே போலீசார் மீட்டுள்ளதாக ரயில்வே டி.எஸ்.பி. திரு. எட்வர்ட் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00