தமிழகத்தில் இன்றும் களைகட்டும் ஜல்லிக்‍கட்டு போட்டிகள் - ஆர்வத்துடன் காளைகளை அடக்‍க களமிறங்கும் வீரர்கள்

Jan 18 2020 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் இன்றும் ஜல்லிக்‍கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாவட்டம் பொத்தமேட்டுப் பட்டியில் ஜல்லிக்‍கட்டு போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. அங்குள்ள வியாகுல மாதா கோயில் முன்பாக அமைக்‍கப்பட்டுள்ள வாடிவாசலில் காளைகள் திறந்து விடப்பட்டன. திருச்சி, திண்டுக்‍கல், மதுரை, சிவகங்கை, புதுக்‍கோட்டை, கரூர் எனப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து வரும் காளைகளை இளைஞர்கள் வீரத்துடன் அடக்‍கி வருகின்றனர். சைக்‍கிள், டி.வி. கட்டில், மின்விசிறி, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்‍கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஜல்லிக்‍கட்டு பேரவை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஜல்லிக்‍கட்டு போட்டி, இன்று வழக்‍கமான உற்சாகத்துடன் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்‍கொண்டனர். காங்கேயம் காளைகள் போட்டி மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. அவற்றை வீரர்கள் வீரத்துடன் அடக்‍கி பரிசுகளை பெற்றுச் செல்லுகின்றனர். இப்போட்டியில் 300க்‍கும் மேற்பட்ட காளைகள் களமிறக்‍கப்படுகின்றன. அவற்றை அடக்‍குவதற்காக 350 வீரர்கள் களம் காணுகின்றனர்.

செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00