சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 7 மாத குழந்தை கடத்தல் - தொடர் சம்பவங்களால் பொதுமக்‍கள் அதிர்ச்சி

Jan 19 2020 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், 7 மாத குழந்தையை கடத்திய பெண்ணை கண்டுபிடிக்க, காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜானி- ரந்தோஷ் தம்பதியினரிடம், அவர்களின் 7 மாத குழந்தையை சினிமாவில் நடிக்‍க வைப்பதாக, பெண் ஒருவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனையடுத்து, தாய் மற்றும் மாமியாருடன் குழந்தையை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திற்கு அப்பெண்மணி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு ஆடைமாற்ற வேண்டும் என்றும், "ஸ்கின்" டெஸ்ட் எடுக்க வேண்டும் எனக்கூறி, குழந்தையை தனியாக ஒரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அப்பெண்மணி வராததால், குழந்தையின் தாய், மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் உதவியுடன், மர்ம பெண்ணை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து, புகைப்படத்தை வெளியிட்டனர். இந்நிலையில், தற்போது குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை பிடிப்பதற்காக, பொதுமக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00