காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்‍கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்‍குகள் - தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்‍கு பரிந்துரை

Jan 19 2020 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிறப்பு காவல் உதவியாளர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு உட்பட 3 வழக்குகளை, தேசிய புலனாய்வு அமைப்புக்‍கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை என்ற இடத்தில், கடந்த 8ம் தேதி இரவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை தீவிரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகிய இருவர் சுட்டுக்​கொன்றனர். இந்த வழக்கில் தலைமறைவான அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இருவரை, பெங்களூர் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர்கள் கன்னியாகுமரிக்‍கு அழைத்து வரப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் வெடிகுண்டு தாக்‍குதல் நடத்தி, சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக தீவிரவாதிகள் காஜா மொய்தீன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட வழக்‍கு, பெங்களூருவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக 17 பேர் மீது தொடரப்பட்ட வழக்‍கு மற்றும் காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக்‍கொல்லப்பட்ட வழக்‍கு ஆகிய 3 வழக்குகளையும், தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த நீதிமன்றங்களில் தேசிய புலனாய்வு நிறுவனம் மனுதாக்கல் செய்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00