R.O தண்ணீர் சுத்திகரிப்பானை தடை செய்ய வேண்டும் : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

Jan 19 2020 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
R.O தண்ணீர் சுத்திகரிப்பானை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலத்தடி நீரை சுத்திகரிக்க ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் எனப்படும் R.O முறை நாடெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், R.O தண்ணீர் சுத்திகரிப்பான் தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட குழு, அதன் அறிக்‍கையை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து R.O தண்ணீர் சுத்திகரிப்பான்களை தடை செய்ய, மத்திய அரசுக்‍கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது ஆனால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை செயல்படுத்த 4 மாதம் அவகாசம் தேவைப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வழக்‍கு, வரும் மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுகாதாரமற்ற நீரினால் பல்வேறு நோய்கள் பரவி வருவதால், R.O தண்ணீர் சுத்திகரிப்பானை தடை செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த திரு.வெற்றிச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00