குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் : மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன

Jan 22 2020 9:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மத்திய-மாநில அரசுகளுக்‍கு எதிராக முழக்‍கங்கள் எழுப்பப்பட்டன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மதிமுக, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. CAA, NRC, NPR, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்‍கள் பதிவேடு உள்ளிட்டவற்றை கண்டித்து, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில், பெண்கள் கருப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டு இயக்கத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர்​கலந்து கொண்டு, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக முழக்‍கங்களை எழுப்பினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாகை தெற்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளர் திரு.சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், இச்சட்டத்தை வாபஸ் பெறக்‍கோரியும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒருங்கிணைந்து பொதுக்‍கூட்டம் நடத்தினர். இதில், அ.ம.மு.க நகரக்‍கழகச் செயலாளர் திரு.அமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களை குறிவைத்து கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் என்றும், இஸ்லாமியர்களுக்‍கு எதிராக செயல்படும் பா.ஜ.க.வுடன் எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காக கூட்டணி வைத்துள்ளதாகவும் பொதுக்‍கூட்டத்தில் உரையாற்றியவர்கள் குற்றம் சாட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00