எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் : அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

Jan 22 2020 9:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் பொதுக்‍கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்சென்னை தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம், சென்னை ஜாபர்கான்பேட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் விருகை திரு.T.S.கண்ணன் தலைமையில், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் திரு.ஹரிகிருஷ்ணன் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இந்தப் பொதுக்‍கூட்டத்தில், கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.செந்தமிழன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் திருவான்மியூர் திரு.முருகன், கழக மாணவரணிச் செயலாளர் திரு.பரணீஸ்வரன், கழக செய்தித் தொடர்பாளர் நடிகர் விக்னேஷ், கழக பேச்சாளர்கள் திரு.பாலசுப்பிரமணியம், திரு.சிவ.கோவிந்தராஜூலு, மாவட்ட அவைத் தலைவர் திரு.சுந்தர்ராஜன், மாவட்ட இணைச் செயலாளர் ராதா யுவராஜா, மாவட்ட துணைச் செயலாளர் செண்பக வள்ளி, பகுதிக்‍ கழகச் செயலாளர் கோட்டூர்புரம் திரு.கந்தன், திரு.சந்திரபோஸ், திரு.அர்ஜூனன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் வச்சலா மற்றும் மாவட்ட, பகுதி மற்றும் வட்டக்‍கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அ.ம.மு.க திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருமழிசை பேரூராட்சிக்‍ கழகம் சார்பில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. T.A.ஏழுமலை, திருமழிசை பேரூராட்சிக்‍ கழகச் செயலாளர் திரு.எம்.கர்ணன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பொருளாளர் பி.ஆர்.சாமி, தலைமை கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணியினரின் சுயநலம் மற்றும் துரோகங்களைப் பட்டியலிட்டனர். மேலும், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களை எடுத்துக்கூறினர். இவ்விழாவில், ஏழை-எளியோர் மற்றும் பெண்களுக்‍கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுகூட்டம் கழுகுமலையில் நடைபெற்றது. கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு. எஸ்.வி.எஸ்.பி மாணிக்கராஜா, எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் திரு. சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 600 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00