போலி நகைகளை அடகு வைத்து 70 லட்ச ரூபாய் மோசடி - தேனாம்பேட்டை கூட்டுறவு சங்கத்தில், அரங்கேறிய மோசடியால் வாடிக்‍கையாளர்கள் அதிர்ச்சி

Jan 22 2020 2:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனாம்பேட்டை வேளாளர் கூட்டுறவு சங்கத்தில், போலி நகைகளை அடகு வைத்து 70 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில், வேளாள தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் நகைகளை அடகு வைத்து, கடன் பெற்று வருகின்றனர். இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்த 2016-ல் இருந்து 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போலி நகைகள் அடகு வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலக அதிகாரிகள், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில், நகை மதிப்பீட்டாளர் பாலையா மற்றும் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர், சங்கத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து, 70 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில், இதுபோன்று மோசடிகள் அதிகம் நடப்பதாகவும், முறையாக விசாரணை நடத்தினால், மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என்றும், சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் கூட்டுறவு கடன் சங்கங்களில், இனியும் இதுபோன்ற மோசடிகள் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00