நீலகிரி மாவட்டத்தில், யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளனவா?- ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு

Jan 23 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டத்தில், யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய, குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி கிராமத்தில், யானைகள் வழித்தடத்தை ஆக்‍கிரமித்து கட்டப்பட்டுள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை அகற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்டோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் கட்டுமான பணிக்கு தடை‍கோரி ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து, இந்த மேல்முறையீடும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அரசிடம் உரிய அனுமதி பெற்று கட்டடங்கள் கட்டப்பட்டதாக, பாதிக்‍கப்பட்டோர் சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, சட்டப்பூர்வ அனுமதியுடன் கட்டடங்கள் கட்டப்பட்டனவா என்பதை அறியவும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டை நிர்ணயிக்கவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், மூவர் குழு அமைக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00