மதுரை நெடுஞ்சாலையில், சாக்குப்பையில் பாதி எரிந்த நிலையில், ஆண் தலை கண்டெடுப்பு : பொதுமக்‍கள் அதிர்ச்சி

Jan 24 2020 7:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை நெடுஞ்சாலையில், சாக்குப்பையில் பாதி எரிந்த நிலையில், ஆண் தலை ஒன்று கண்டெடுக்‍கப்பட்டது அதிர்ச்சிக்‍கு உள்ளாக்‍கியுள்ளது.

டீ புதுப்பட்டி காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த 11ம் தேதி காணாமல் போனதாக, அவரது தாயார் தனம் என்பவர், திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் தனிப்படை அமைத்து, வெங்கடேஷை தேடி வந்ததுடன், அது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருமங்கலம் ராஜபாளையம் சாலையில் உள்ள டி.குன்னத்தூர் அருகே, சாலை ஓரத்தில் துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சாக்குப்பையில் பாதி எரிந்த நிலையில் தலை ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். பின்னர் அதனை ஆய்வு செய்வதற்காக, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உயிரிழந்து கிடந்த தலை, காணாமல் போன வெங்கடேஷின் தலையா? அல்லது வேறு யாருடையதா? என்ற சந்தேகதத்தின் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, திண்டுக்‍கல் மாவட்டம் கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே, ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம், அப்பகுதி மக்‍களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த அணில் குமார் என்பவர், கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மதுபான பாரில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல புதன்கிழமை அன்று பணிக்‍கு சென்றவர், வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவரது உறவினர்கள், பணிபுரியும் இடத்தில் சென்று பார்த்தபோது, பேருந்து நிலையம் அருகே பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததைக்‍ கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்‍கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00