அம்மா நிராகரித்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுகிறார் : மக்களை இக்கட்டான நிலைக்கு பழனிசாமி கொண்டு செல்கிறார் - கழக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர் சரஸ்வதி

Jan 24 2020 9:16AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக நலன் கருதி, மாண்புமிகு அம்மா நிராகரித்த திட்டங்களை, எடப்பாடி பழனிச்சாமி அரசு அமல்படுத்தி, பொதுமக்‍களை இக்‍கட்டான நிலைக்‍கு தள்ளி விட்டதாக கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி. சி.ஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக நிர்வாகி தர்பாரண்யம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு. பா. வேல்முருகன், கழக அமைப்புச் செயலாளர் திரு. பி.எஸ். அருள் மற்றும் திரளான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி. சி.ஆர். சரஸ்வதி, தமிழக நலன் கருதி, மாண்புமிகு அம்மா நிராகரித்த திட்டங்களை, எடப்பாடி பழனிச்சாமி அரசு அமல்படுத்தி, பொதுமக்‍களை இக்‍கட்டான நிலைக்‍கு தள்ளி விட்டதாக குற்றம் சாட்டினார்.

இதனிடையே, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.எம்.சூரியமூர்த்தி தலைமையில், வடலூரில், புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக, சிதம்பரத்தில் நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில், கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக பெருந்திரளாக கலந்து கொள்வது - எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், நகரக் கழக செயலாளர்கள் திரு. ராதாகிருஷ்ணன், பூக்கடை சக்திவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு. ஆர்.வி. சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், வரும் 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் பொது கூட்டம் நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் திரு. செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் அம்மு ஆன்றோ உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00