தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் : நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபாடு

Jan 24 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
தை அமாவாசையையொட்டி, தமிழகத்தில் உள்ள முக்‍கிய நீர்நிலைகளில், பொதுமக்‍கள் இன்று, தங்களது முன்னோர்களுக்‍கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

தை அமாவாசையையொட்டி, திருச்செந்தூரில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் இன்று அதிகாலையே குவிந்த மக்‍கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் செய்த பின்னர் கடலில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

ராமேஸ்வரத்தில், ஏராளமானோர் அதிகாலை 4 மணி அளவில் தர்ப்பணம் செய்து, அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி, முன்னோரை வழிபட்டனர். பின்னர், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்ததால், ராமேஸ்வரம் சுற்று வட்டாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருச்சி அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் முதாதையருக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். காவிரிஆற்றில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதிகொடுத்தும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும் வழிபாடு செய்தனர். பின்னர், காவிரி தாயாரை வணங்கி, ஸ்ரீரங்கம், திருவாணைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தனர். இதேபோன்று அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைந்துள்ள படித்துறைகளில் பொதுமக்கள் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் 64 தீர்த்த கட்டங்களை உள்ளடக்‍கிய திருவாரூர் ஸ்ரீகமலாலய தீர்த்த குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்‍கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர், சர்வதோஷ பரிகார ஸ்தலமாக விளங்கி வரும் தியாகராஜ சுவாமியை பொதுமக்‍கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

லட்சுமி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில், முன்னோர்கள் நினைவாக பலி கர்ம பூஜைகள் செய்து ஏராளமனோர்கள் புனித நீராடினார்கள். எள், பச்சரிசி, தர்பை, பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள். முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிவர்கள் பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்று சென்றனர்.

தை அமாவாசையை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அருவியில் நீராடி, குற்றாலீஸ்வரரை வழிபாடு செய்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்து அமைந்துள்ள காசிக்‍கு நிகராக புண்ணியம் தரும் காமேஸ்வரம் கடற்கரையில் ஏராளமானோர் தங்களுடைய முன்னோர்களுக்‍கு திதி கொடுத்து கடலில் புனித நீராடினர். இதேபோன்று வேதாரண்யம் கோடியக்‍கரை கடலிலும் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00