டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களுக்‍கு வாழ்நாள் தடை - வட்டாட்சியர்கள், ஆயுதப்படை காவலர்கள் உட்பட 5 பேர் கைது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை

Jan 24 2020 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக 99 பேரை தகுதிநீக்கம் செய்து டி.என்.பி.எஸ்.சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விசாரணையை தீவிரப்படுத்தியது. குறிப்பிட்ட 2 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதிநீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அவர்களுக்‍கு பதில் தரவரிசைப்பட்டியலில் வந்த தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு மையங்கள் தவிர மற்ற எந்த மையத்திலும் முறைகேடு நடக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இதனிடையே தேர்வு முறைகேடு தொடர்பாக, ராமேஸ்வரம், ​கீழக்‍கரை வட்டாட்சியர்கள், இரண்டு காவலர்கள் உட்பட ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் மீதும் 6 பிரிவுகளின்கீழ் வழக்‍குப்பதிவு செய்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்‍கை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00