குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்கு இஸ்லாமியர்கள் முற்றுகை போராட்டம் : ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரின் ஆதரவாளர்கள் சாலை மறியல் - காவல்துறை அதிகாரிகளுக்‍கு பகிரங்க மிரட்டல்

Jan 24 2020 6:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்த திரு.ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.யுமான திரு.ரவீந்திரநாத்குமாரின் காரை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டதைக்‍ கண்டித்து ரவீந்திரநாத்குமாரின் ஆதரவாளர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதுடன், காவல்துறை அதிகாரிகளுக்‍கு பகிரங்க மிரட்டல் விடுத்தனர்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு எ​திர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டம் கம்பம் அருகே, திரு.ரவீந்திரநாத்தின் காரை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டு கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில், ரவீந்திரநாத் குமாரின் காரை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மதுரை விமானநிலைய சாலையில் அனுமதியின்றி ரவிந்தநாத் குமாரின் ஆதரவாளர்கள் சிலர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அவனியாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் பெத்துராஜ் கூறியபோது, ரவிந்தநாத் ஆதரவாளர்கள் கடும் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00