குடியரசு தின விழாவை சீர்குலைக்‍க சதித்திட்டம் : பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு

Jan 24 2020 8:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில் தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் 71-வது குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை சீர்குலைக்கும் வகையில் தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து முக்‍கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்‍கணக்‍கான பயணிகள் வருகை தருவதால், ராமேஸ்வரம் ரயில் நிலையம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் உடைமைகள் சோதனைக்‍குப் பின்னரே அனுமதிக்‍கப்படுகின்றன.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயிலில் கூடுதலாக இரண்டு ஆயுதம் ஏந்திய ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் ரயில் பாலத்தில், கமாண்டோ படையினர், மத்திய இருப்புப்பாதை போலீசார் மற்றும் பட்டாலியன் படை போலீசார் ஆயுதம் ஏந்தி தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00