ஜனநாயகத்திற்கு தீங்கு ஏதும் நேராமல் பாதுகாக்‍க வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை - குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Jan 25 2020 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாட்டு மக்‍கள் அனைவருக்‍கும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு தீங்கு நேராமல் போற்றி பாதுகாப்பதோடு, யாரையும் காயப்படுத்தாமல் எல்லோருடைய உரிமைகளையும் சுதந்திரத்தையும் பேணி பாதுகாத்து ஒற்றுமையோடு வாழ்வதற்கான உறுதியை இந்த நல்ல நாளில் அனைவரும் ஏற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், 71-வது குடியரசு தினத்தைக்‍ கொண்டாடும் பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமக்‍கள் அனைவருக்‍கும் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக்‍ கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகம் நம்மை மதித்து கொண்டாடுவதற்கும், போற்றி புகழ்வதற்கும் ஆணிவேராக இருப்பது நம்முடைய ஜனநாயக அமைப்புதான் - இந்த பூமியில் மக்‍களாட்சி நடக்‍கிற மிகப்பெரிய நாடு என்கிற பெருமிதத்தை நமக்‍கு தந்திருப்பதும் ஜனநாயகம்தான் - இனம், மொழி, மதம், சாதி, புவியியல் அமைப்பு என எல்லா பாகுபாடுகளையும் தாண்டி குடியரசுதான் இந்தியராக நம்மை ஒன்றிணைக்‍கிறது - எந்த பேதமும் பார்க்‍காமல் இந்நாட்டின் குடிமக்‍கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய அவசியத்தை நம் அரசமைப்பு முறைதான் கட்டிக்‍காப்பாற்றி வருகிறது என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜனநாயகத்திற்கு தீங்கு எதுவும் நேராமல் போற்றிப் பாதுகாக்‍கவேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை - யாரையும் காயப்படுத்தாமல், எல்லோருடைய உரிமைகளையும், சுதந்திரத்தையும் பேணிப் பாதுகாத்து, ஒற்றுமையோடு வாழ்வதற்கான உறுதியை இந்த நல்லநாளில் அனைவரும் எடுத்துக்‍கொள்வோம் - இந்தியாவின் மிகப்பெரிய பலமான ஜனநாயகத்தைக்‍ கொண்டு தேசத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபடுவோம் - நெஞ்சம் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகள் என கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00