தாய்மொழிக்‍காக இன்னுயிரை துரந்த தியாகிகளின் நினைவைப் போற்றும் தினம் - அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் சார்பில் மரியாதை

Jan 25 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த, மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், வீர வணக்‍கம் செலுத்தப்பட்டது.

திருச்சி தென்னூர் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன் தலைமையில், கழக அமைப்புச் செயலாளர் திருமதி. சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாணவரணி செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, உழவர்சந்தை திடலிலிருந்து ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றம் தொண்டர்கள், பேரணியாக சென்று மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில், அஞ்சலி செலுத்தினர்.

மதுரை மாநகர் மாவட்ட கழக மாணவரணி சார்பில் தலைமை நிலைய செயலாளர் திரு. கே.கே.உமாதேவன் தலைமையில், தல்லாகுளம் பகுதியிலிருந்து தமுக்கம் வரை, கழகத்தினர் ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள தமிழ் அன்னையின் திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் டாக்டர்.கதிர்காமு, கழக இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாத்துரை, கழக அம்மா பேரவை செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி, கழக மகளிரணி செயலாளர் திருமதி. வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள, மொழிப்போர் தியாகி மாயூரம் சாரங்கபாணி நினைவிடத்தில், கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நாகை வடக்கு மாவட்டக்கழக செயலாளர் திரு. எஸ்.செந்தமிழன் தலைமையில், ஒன்றிய கழக செயலாளர்கள் திரு. கே.வி. ஜனார்த்தனன், திரு. பாரிவள்ளல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள, மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு, கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளருமான திரு. கே.எஸ்.கே. பாலமுருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளருமான திரு. பி. எஸ்.அருள் தலைமையில், கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00