குரூப்-4 தேர்வு முறைகேடு விசாரணையில் தோண்டத் தோண்ட கிடைக்‍கும் புதிய தகவல் - மேலும் 100 பேரிடம் தீவிர விசாரணை

Jan 25 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக, தமிழகம் முழுவதும் 100 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு ​தொடர்பாக தேர்வர்கள் 99 பேருக்‍கு வாழ்நாள் தடை விதிக்‍கப்பட்டது. மேலும், ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு அதிகாரியாக இருந்த 2 வட்டாட்சியர்கள், சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய, பள்ளிக்கல்வித் துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் ரமேஷ், எரிசக்தி துறையில் பணிபுரியும் திருகுமரன், தேர்வில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் உள்ளிட்ட 3 இடைத்தரகர்களையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், கடலூரில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நெல்லையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மேலும் 100 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00