தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற முறைகேடு தற்போதும் தொடர்வதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வேதனை

Jan 25 2020 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற முறைகேடு தற்போதும் தொடர்வதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வேதனை தெரிவித்துள்ளார். நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், இதற்கான முடிவு என்னவாகும் என்பதை வருங்காலம்தான் தீர்மானிக்‍கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் நாளிதழான தினமணியின் இன்றைய பதிப்பில், "ஊழல், திறமையின்மையின் ஊற்றுக்‍கண்" என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. முருகன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அரசுப் பணியாளர் தேர்வு மையங்கள் நேர்மையாகச் செயல்படாமல் இருப்பது பழைய கதை என்று நினைத்து வந்தவர்களுக்‍கு ராமேசுவரம், கீழக்‍கரை ஆகிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு மையங்களில் நடந்த முறைகேடு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சிக்‍காலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. செல்லமுத்து இருந்தபோது, அவரது வீட்டிலும், அன்றைய ஆணைய உறுப்பினர்கள் 13 பேரின் வீட்டிலும், காவல்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் திடீர் சோதனையில் ஈடுபட்டது. இவர்கள் அனைவரும் பணம் பெற்றுக்‍ கொண்டு, பல் டாக்‍டர்கள் வேலைக்‍கு பலரை தேர்ந்தெடுத்தது அம்பலமாகியது.

2006-2008-ம் ஆண்டுகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதவிக்‍கு லஞ்சம் வாங்கிக்‍ கொண்டு பலரை தேர்வு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபோன்று, பல குற்றச்சாட்டுகள், பலமுறை தமிழகத் தேர்வாணையம் மீது உருவாக்‍கப்பட்டதாக, கட்டுரையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஒரு உறுப்பினரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது, 26 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்‍கப்பணம் கைப்பற்றப்பட்டது.

இதன்பிறகு, குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இப்போது மீண்டும் குற்றச்சாட்டுகள் உருவாகத் தொடங்கியுள்ளன. அவற்றை முழுமையாக விசாரித்து தடுப்பு நடவடிக்‍கைகளை எடுக்‍க வேண்டியது அவசியம் என கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு. செல்லமுத்து தலைவராக இருந்ததைத் தொடர்ந்து, ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்‍கைகள் தொடர்ந்த நிலையில், ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் அதிகரித்துள்ளதை, தற்போது நடைபெற்ற முறைகேடுகள் நிரூபிப்பதாகவும் கட்டுரையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், இதற்கான முடிவு என்னவாகும் என்பதை வருங்காலந்தான் தீர்மானிக்‍கும் என்றும், பிரபல தமிழ் நாளிதழ், இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00