குடியரசு தினவிழா கொண்டாட்டம் : சென்னையில் மத்திய அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்றம்

Jan 26 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்றப்பட்டது.

71-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி தலைமை அலுவலகத்தில், அதன் தென் மண்டல மேலாளர் திரு.கதிரேசன் தேசியகொடியை ஏற்றினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர் திருமதி.அணு ஜெயசிங் தேசிய கொடி ஏற்றினார். சென்னை மண்ணடியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு.எம்.எம். பார்த்திபன் கொடி ஏற்றினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், நேரடி வரி விதிப்பு மற்றும் கலால் துறையின் முதன்மை ஆணையர் திரு.கண்ணன் தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

71-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி திரு.ஏ.பி.சாஹி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், தேசிய மாணவர் படை, சாரண சாரணியர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00