தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் தினம் : கழகம் சார்பில் வீரவணக்க பொதுக்கூட்டம்

Jan 26 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கழகத்தினர் மொழிப்போர் தியாகிகளுக்‍கு வீர வணக்‍கம் செலுத்தினர்.

மதுரை மாநகர், புறநகர் மாவட்ட கழக மாணவரணி சார்பில், மதுரை முனிச்சாலை பகுதியில், கழக அமைப்பு செயலாளர் திரு.கே.சிவசண்முகம் தலைமையில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கழக செய்தி தொடர்பாளர் திரு.அதிவீர ராமபாண்டியன், மாவட்ட கழக செயலாளர்கள் திரு.மா.ஜெயபால், திரு.ஷ.ராஜலிங்கம், திரு.இ.மகேந்திரன், திரு.செ.சரவணன், மாணவரணி மாவட்ட செயலாளர்கள் த​திரு.வரதராஜன், திரு.சிக்கந்தர், திரு.சிவநேசன், திரு.அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, மத்தியம் மற்றும் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில், திருவொற்றியூரில், வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாணவரணி செயலாளர்கள் திரு.கே.ராமன் திரு.அசன் அலி சோமுசா, திரு.பா.ராஜேஷ், மாவட்ட கழக செயலாளர்கள், திரு.பொன்ராஜா, திரு. டி.எ.ஏழுமலை, திரு.இ.லக்கி முருகன், திரு.கே.ஏ.மலைமேகம், கழக அமைப்பு செயலாளர் திரு.நேதாஜி கணேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டக் கழகம் மற்றும் உத்திரமேரூர் மேற்கு ஒன்றியக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில், மாவட்டக் கழக செயலாளர் மொளச்சூர் திரு. இரா. பெருமாள், உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.வி.ஆர்.அண்ணாமலை, உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.இரா.கமலக்கண்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட கழகம் சார்பாக, சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளருமான திரு. கே.எஸ்.கே. பாலமுருகன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ​திரு.வி.எம்.சூரியமூர்த்தி, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.அக்ரி.பி. முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், பொதுமக்‍களும் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி கழக வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில், வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.நம்பிராஜன், வடக்கு மாவட்ட செயலாளர் திரு.சுந்தர்ராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் திரு.புவனேஸவரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில், மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.எதிர்கோட்டை SG. சுப்பிரமணியன், கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. MP ஜெயராஜா. தலைமை நிலைய செயலாளர் திரு.கே.கே. உமாதேவன், கழக அமைப்புச் செயலாளர் நிலக்கோட்டை திரு. தங்கதுரை, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் கே.எஸ். திரு.கந்தசாமி. கழக இளைஞர் பாசறை துணைச் செயலாளர் திரு.SGS. விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கெண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00