டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு - மேலும் இருவர் கைது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை

Jan 28 2020 7:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில், ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் 39 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த 39 நபர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுத ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி., டின்.என்.பி.எஸ்.சி அதிகாரிகள், தேர்வர்கள், இடைத்தரகர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக நடைபெற்ற விசாரணையில், இடைத்தரகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தமங்கலத்சை் சேர்ந்த விக்‍‍னேஷ் ஆகியோர், ‍தேர்வெழுத இடைத்தரகர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாய் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00