காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு : குற்றவாளிகளிடமிருந்து 50 வகையான ஆவணங்கள் பறிமுதல்

Jan 29 2020 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 50 வகையான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவிஆய்வாளர் வில்சன், கடந்த 8-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்துல் சமீம், தவுஃபீக் ஆகிய இரண்டு தீவிரவாதிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், இவர்கள் இருவரும் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கத்தி ​ஆகியவை கேரளாவில் கைப்பற்றப்பட்டன.

அப்துல் சமீம், தவுஃபீக் இருவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவ்ஃபீக்கை, இளங்கடை என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்று நேற்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, அப்துல் சமீம், தவுஃபீக் இருவருரிடம் இருந்து, 50 வகையான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, துப்பாக்கி வாங்கியதாக கொலையாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00