பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு : ஹைதராபாத்தில் தயாராகும் பிரம்மாண்ட செட்

Jan 29 2020 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்‍காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்‍கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை, திரைப்படமாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் இதில் நடித்து வருகின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைக்‍கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்ற காட்சிகள் படமாக்‍கப்பட்டன. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையிலும், ஹைதராபாத்திலும் நடைபெற உள்ளன. இதற்காக அங்கு பிரம்மாண்ட செட் அமைக்‍கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். மேலும் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யாராயும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் திரிஷா குந்தவையாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல் ராஜராஜ சோழன் வேடத்தில் ஜெயம் ரவி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00