கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம் - முன்னெச்சரிக்கை கருதி தமிழகத்திலேயே முதன்முறையாக ஏற்பாடு

Jan 29 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பிரிவு இன்று தொடங்கப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் பரவாமல் இருக்‍க தீவிர நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பிரிவு இன்று தொடங்கப்பட்டது. இதனை மருத்துவமனை முதல்வர் சங்குமணி தொடங்கிவைத்து பார்வையிட்டார். இந்த சிறப்பு பிரிவில் 8படுக்கைகள் கொண்ட தனிதனி அறைகள் உள்ளன. மேலும் நுரையீரல் சிகிச்சை மருத்துவர்கள் இருவர் தலைமையில் இரு மருத்துவகுழுவினர் 24மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சிறப்பு வார்டு தொடக்க நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை முதல்வர் திரு.சங்குமணி, தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை எனவும், இந்த வைரஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையை தொடர்புகொள்ளலாம் என கூறினார். முதன்முறையாக சிறப்பு வார்டு திறப்பிற்காக வார்டு பகுதியின் வாசலில் கோலிமிட்டு, மருத்துவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தொடங்கி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவசரகால வார்டு பகுதியை திறப்பதில் இது போன்ற விளம்பரங்கள் தேவையா? என சர்ச்சை கிளம்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00