தஞ்சை பெரு உடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த கோரிய வழக்குகளின் விசாரணை நிறைவு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

Jan 29 2020 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தஞ்சை பெரு உடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த கோரிய வழக்குகளின் விசாரணை நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா, 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி தஞ்சாவூரை சேர்ந்த திரு.செந்தில்நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திரு.திருமுருகன், தஞ்சை பெரிய கோவில் தமிழ் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு.பெ.மணியரசன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதே போன்று, சமஸ்கிருதத்தில் நடத்தக்கோரி மயிலாப்பூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை பதிலளிக்க நீதிபதிகள் திரு.துரைசுவாமி, திரு.ரவீந்தரன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, இன்றைய விசாரணையின்போது பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த அறநிலையத்துறை, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு ஆகம விதிப்படி தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் என தெரிவித்தது. நந்தி மண்டபம், கருவறை, கொடி மரம் அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகிய அனைத்து இடங்களிலும், தமிழில் வேதங்கள் ஓதப்படும் என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00