டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மோசடி வழக்கு - முறைகேட்டில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளர் மருத்துவ விடுப்பில் மாயமானதாக தகவல்

Jan 29 2020 9:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேட்டில் தொடர்புடையதாக எழுந்த புகாரில் தேடப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சித்தாண்டி மருத்துவ விடுப்பில் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்தாண்டு நடந்த குரூப் 4 போட்டித்தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, சென்னையில் பணியாற்றி வரும் சிவகங்கையைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் சித்தாண்டியின் குடும்பத்தினர் 3 பேர், குரூப் 2-ஏ தேர்வில் 10 இடங்களுக்குள் இடம் பிடித்திருந்தது சந்தேகத்தை எழுப்பியதால், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அதுகுறித்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், காவல்துறை உதவி ஆய்வாளர் சித்தாண்டி, நீண்ட விடுப்பு எடுத்துவிட்டுச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது தம்பி வேல்முருகனை சிவகங்கையிலிருந்து மதுரை அழைத்து வந்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00