முத்திரைத்தாள் மற்றும் ஒப்பந்தங்களுக்‍கான பதிவு கட்டணம் குறைப்பு - ஒரு சதவீதத்திலிருந்து புள்ளி இரண்டு ஐந்து சதவீதமாக குறைக்‍கப்படும் என அறிவிப்பு

Feb 14 2020 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
2020-21ம் ஆண்டுக்‍கான நிதிநிலை அறிக்‍கையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் ஆட்சேபனை இல்லாத புறம்போக்‍கு நிலங்களில் வசிப்போருக்‍கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டுக்‍கான பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்‍கீடு அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், பெண்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, நிர்பயா திட்டத்தில், பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்‍கள் சுமார் 75 கோடி ரூபாய் செலவில் பொருத்தப்படும் என குறிப்பிட்டார். ஆட்சேபனை இல்லாத புறம்போக்‍கு நிலங்களில் வசிப்போருக்‍கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். சிறு குறு தொழில்முனைவோருக்‍கு வழங்கப்படும் வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது- சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் அமைக்‍கப்படும். ஸ்மார்ட் கார்டு இருந்தால் எந்த கடையிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்‍கொள்ளலாம்- திருந்திய நெல் சாகுபடி 27 புள்ளி ஒன்று எட்டு லட்சம் ஏக்‍கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்படும்- இயற்கை மரணத்தில் உயிரிழந்தால் வழங்கப்படும் நிதியுதவி 2 லட்சமாக உயர்த்தப்படும்- விபத்து உள்ளிட்ட காரணங்களால் அகால மரணமடைவோரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி 4 லட்சமாக உயர்த்தப்படும்- விபத்தின்போது நிரந்தரமாக பாதிப்பு ஏற்பட்டால் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் நிதிநிலை அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00