தமிழகம் முழுவதும் இறுதி வாக்‍காளர் பட்டியல் வெளியீடு - அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்கள்

Feb 14 2020 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் இன்று, இறுதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

தமிழகம் முழுவதும் இன்று, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 16 சட்டமன்றத் தொகுதிக்களுக்கான பட்டியலை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் இன்று வெளியிட்டார். அதன்படி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 பேர் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் 19 லட்சத்து 15 ஆயிரத்து 718 பேரும், பெண்கள் 19 லட்சத்து 71 ஆயிரத்து 966 பேரும், மூன்றாம் பாலித்தனவர் 989 பேரும் உள்ளனர். அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக வேளச்சேரியும், குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக துறைமுகமும் உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ் மலர்விழி வெளியிட்டார். 12 லட்சத்து 33 ஆயிரத்து 53 வாக்‍காளர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திரு.பிரவீன்நாயர் வெளியிட்டார். 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்கள் 6 லட்சத்து 42 ஆயிரத்து 630 பேரும், பெண்கள் 6 லட்சத்து 61 ஆயிரத்து 87l, பேரும் மூன்றாம் பாலினத்தவர் 43 பேரும் என மொத்தம் 13 லட்சத்து 4 ஆயிரத்து 544 பேர் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்‍கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் திரு.சிவராசு இன்று வெளியிட்டார். இதில், மொத்தம் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 வாக்காளர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்துரி இறுதி வாக்காளர் பட்டியலை, அரசியல் கட்சியினர் முன்னியிலையில் ஆட்சியர் வெளியிட்டார். ஆறு சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 50 ஆயிரத்து 689 ​வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகளுக்‍கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி விஜயலட்சுமி வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 18 லட்சத்து 33 ஆயிரத்து 409 வாக்காளர்கள் உள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00