ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்‍களை தகுதி நீக்‍கம் செய்யக்‍கோரி தொடரப்பட்ட வழக்‍கு முடித்துவைப்பு - சபாநாயகரே சட்டப்படி நடவடிக்‍கை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Feb 14 2020 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்‍கள் தகுதி நீக்‍கம் தொடர்பான விவகாரத்தில், சபாநாயகரே உரிய நடவடிக்‍கை எடுப்பார் எனக்‍ கூறி வழக்‍கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.

தமிழக சட்டசபையில், 2017-ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சி கொறடாவின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததால், அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, அமமுக பொருளாளர் திரு. வெற்றிவேல் மற்றும் திமுக சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. ஓராண்டுக்கும் மேலாக வழக்கு விசாரணை, நிலுவையில் இருந்துவந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இவ்வழக்‍கு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 11 எம்.எல்.ஏக்‍கள் விவகாரத்தில் எப்போது நடவடிக்‍கை எடுப்பீர்கள்? எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கைகள் என்ன? எனக்‍ கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்‍க தமிழக சட்டப்பேரவை செயலாளருக்‍கு உத்தரவிட்டது.

இவ்வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, 11 எம்.எல்.ஏக்‍களுக்‍கும், சபாநாயகர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, சபாநாயகரின் வழக்‍கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, இவ்விவகாரத்தில், சபாநாயகரே சட்டப்படி நடவடிக்‍கை மேற்கொள்வார் எனக்‍ கூறி, வழக்‍கு முடித்து வைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00