காற்றில் வரைந்த ஓவியம் போல செயல் திட்டம் இல்லாத வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட் - மொத்தத்தில் மக்‍களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்‍கை என டிடிவி தினகரன் கருத்து

Feb 14 2020 7:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக பட்ஜெட், "காற்றில் வரைந்த ஓவியம்" போல செயல் திட்டமில்லாத வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட்டாக உள்ளதாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், விமர்சித்துள்ளார். தமிழகத்தை கடனில் தத்தளிக்க வைத்திருப்பது ஆட்சியாளர்களின் திறமையின்மையை காட்டுகிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தெளிவான செயல் திட்டங்கள் இல்லாமல் போகிறபோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலம் காற்றில் வரைந்த ஓவியமாக பழனிசாமி அரசின் பட்ஜெட் அமைந்திருக்கிறது என விமர்சித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளிலும் நிதி நிலை அறிக்கைகள் வெறும் அறிவிப்புகளாக இருந்ததைப் போலவே, தங்களின் கடைசி முழு பட்ஜெட்டையும் இந்த ஆட்சியாளர்கள் தாக்கல்செய்துள்ளனர் என திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதில், தமிழக அரசின் கடன் 4லட்சத்து 56ஆயிரத்து 660 கோடியாக உயர்ந்திருப்பது கவலை அளிக்கிறது - பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் திறனற்ற நிர்வாகத்தால் ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனின் தலையிலும் சுமார் 57ஆயிரம் ரூபாய் கடன் சுமை ஏறியிருக்கிறது - 128 பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்த கடனை குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை என திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று பழனிசாமி அரசு கூறிவரும் நிலையில், வரி விதிப்பில் மாநிலத்திற்கு வழங்கவேண்டிய நிதிப்பகிர்வுகளில் வரலாறு காணாத இறக்கம் ஏற்பட்டு, தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தமிழ்நாட்டின் நிதிநிலை சிக்கலாகி இருப்பதாகவும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்றும் திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அப்படியென்றால், நிதி கேட்பதாக சொல்லிக்கொண்டு அடிக்கடி டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக அமைச்சர்கள் யாருடைய நலனுக்காக "இணக்கமாக" செயல்பட்டு எதைச் சாதித்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் என திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் கனவுத்திட்டமான அம்மா உணவகங்களை மொத்தமாகச் சீரழித்து பலப்பல இடங்களில் மூடுகிற நிலைக்கு கொண்டுவந்ததுடன் அதனை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்கள், இப்போது தேர்தலுக்காக இத்திட்டத்திற்கு 100 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக கூறியிருக்கிறார்கள் என திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் அறிவிப்பு குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை, செயல் திட்டம் பற்றி பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது - ஏனெனில், இப்படித்தான் நீட் தேர்வு விவகாரத்தில் சட்டம் கொண்டு வந்ததாகச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிய துரோக வரலாறு பழனிசாமி அரசுக்கு இருப்பதால், இதிலும் அப்படி ஏதாவது விளையாடிவிடுவார்களோ என்ற அச்சம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் இருக்கிறது என திரு. டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

கரும்பு விவசாயத்திற்கான நுண்ணீர் பாசனத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது - அதேநேரத்தில் சர்க்கரை ஆலைகளிடமிருந்து கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத்தொகையை பெற்றுத்தருவது பற்றியோ, இதனால் கரும்பு சாகுபடி செய்வதிலிருந்தே விவசாயிகள் வெளியேறுவதைத் தடுப்பது குறித்தோ எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை சீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ஆயிரத்து 160 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்கிற விவரத்தை தெரிவிக்காமல், இதே திட்டத்திற்காக தற்போது 5,439 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள் என திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இந்த நிதியைக் கொண்டாவது அடையாற்றையும், கூவத்தையும் சீரமைப்பார்களா என்று பார்க்கலாம் என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பிலேயே அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மற்றும் 10ம் வகுப்பு இடைநிற்றலில் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியிருந்தது - ஆனால், இதையெல்லாம் மொத்தமாக மறைத்துவிட்டு பள்ளிக்கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருப்பதாக பட்ஜெட்டில் தங்களுக்குத் தாங்களே பெருமைபொங்க சொல்லியிருப்பதைப் பார்த்து வேதனையோடு சிரிக்கத்தான் தோன்றுகிறது என திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் கீழடியில் அகழாய்வு வைப்பகம் அமைப்பதற்கு 12 புள்ளி இரண்டு ஒன்று கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ள திரு.டிடிவி தினகரன், ஆனால், இதனை உண்மையான அக்கறையோடு ஆட்சியாளர்கள் செயல்படுத்தவேண்டும் என கேட்டுக்‍கொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக 5 இடங்களில் உயர்திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குவோம் என்ற கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பே இன்னும் செயல்பாட்டிற்கு வராத நிலையில், இப்போது புதிதாக மையங்கள் உருவாக்கப்படும் என அறிவித்திருப்பது இளைஞர் சமுதாயத்தை ஏமாற்றும் செயலாகும் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நெருங்கிவரும் தேர்தலைக் கண்டு திறனற்ற ஆட்சியாளர்கள் எந்த அளவிற்கு குழப்பத்திலும், பதற்றத்திலும் இருக்கிறார்கள் என்பதை காட்டும் வகையில் இந்த ஒட்டுமொத்த பட்ஜெட்டும் அமைந்திருக்கிறது என திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00