தமிழகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்து‍களில் 4 பேர் உயிரிழப்பு

Feb 14 2020 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்து‍களில், 4 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த கண்ணதாசன்-பூர்ணிமா தம்பதி, சென்னையிலிருந்து தஞ்சைக்‍கு காரில் திரும்பிக்‍ கொண்டிருந்தனர். அரியலூர் அருகே மருதையாற்று பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானது. இதில் புது மாப்பிள்ளை கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணப்பெண் பூர்ணிமா உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார்.

கோவையில் சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். கோவையைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது மனைவி மற்றும் மாமியாருடன் காரில் கரூர் சென்று கொண்டிருந்தார். கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், எதிரே வந்த இருசக்‍கர வாகனத்தில் மோதியதில், கார் நிலைத்தடுமாறி சாலையோர கிணற்றில் விழுந்தது. இருசக்‍கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார். சங்கரின் மனைவி திரிபுரசுந்தரி, மாமியார் சாவித்திரி ஆகியோர் கிணற்றில் மூழ்கி பலியாகினர். காயங்களுடன் மீட்கப்பட்ட சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00