டி.என்.பி.எஸ்.சி வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமாருக்‍கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் - முறைகேடு தொடர்பாக மேலும் இருவர் சரண்

Feb 14 2020 7:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மேலும் இருவர் சரணடைந்தனர்.

டிஎன்டிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில், இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். காவல் முடிவடைந்த நிலையில், ஜெயக்குமாரை இன்று சென்னை எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இடைத்தரகர் ஜெயக்குமாரை வரும் 28-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ, விஏஓ உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 46 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில், சென்னை கொளத்துரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் சென்னை ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ஆசிரியராக பணியாற்றிய இவர், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான விடைகளை முறைகேடாக எடுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இவரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில் இன்று சரணடைந்தார். இவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00