இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த மக்கள் : மாநிலம் முழுவதும் விடிய விடிய நடைபெற்ற மறியல்

Feb 15 2020 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், நள்ளிரவில், இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில், SDPI அமைப்பினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்கள், மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், பெரிய பள்ளிவாயில் முன்பு, பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிசாமி அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் கொண்டு வரக்கோரியும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் போலீசாரை கண்டித்தும் , தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர் . இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூரை அடுத்த உடுமலை அருகே கொல்லம்பட்டறை பகுதியில் பெண்கள் உட்பட பல இஸ்லாமியர்கள் ஒன்று கூடி காவல்துறை அடக்குமுறை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கபட்டு உள்ளது.

ஈரோடு பேருந்துநிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ, தமிழக முஸ்லிம் கழகம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமிஆ பள்ளிவாசல் முன்பு இரவு திடீரென இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தமிழக அரசு துண்டுதலின் பெயரில் போலீசார் தாக்கியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ராமநாதபுரத்தில் நள்ளிரவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசுக்கும் தமிழக எடப்பாடி அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

திருச்சி பாலக்கரையில் நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து கண்டோன்மெண்ட் எம்.ஜி.ஆர் சிலை அருகில் நூறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சாலையில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் நெல்பேட்டை, மகபூப்பாளையம், வில்லாபுரம், கோரிப்பாளையம், மேலூர், சிலைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பெண்கள் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். வில்லாபுரம் பகுதியில் விமான நிலையம் செல்லும் சாலையில் நடைபெற்ற சாலை மறியல் காரணமாக நீண்ட நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .

திருநெல்வேலி மாவட்ட அனைத்து ஜமாத் சார்பில் நெல்லை டவுனில் கண்டன பேரணி நடைபெற்றது. நெல்லை மேலப்பாளையம் மற்றும் பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குளச்சல், அழகிய மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இஸ்லாமியஅமைப்புகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் SDPI அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போரட்டத்தின் போது குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராகவும், காவல்துறையினரை கண்டித்தும் முழக்‍கங்கள் எழுப்பப்பட்டன.

நாகை மாவட்டம் பொறையார் ராஜீவ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இஸ்லாமிய அமைப்பினர் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால், நாகை-சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திரண்ட இஸ்லாமிய அமைப்பினர், நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தினால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முடங்கியது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசைக்‍ கண்டித்து முழக்‍கங்களை எழுப்பினர்.

மதுரை மகபூப்பாளையத்தில் 2வது நாளாக ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை தடியடியைக்‍ கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் அவர்கள் முழக்‍கமிட்டனர். மேலூர், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இதன்காரணமாக ஏராளமான போலீசார் குவிக்‍கப்பட்டனர்.

இதேபோல், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திய அவர்கள், போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இப்பிரச்சனையில் தமிழக அரசு நடவடிக்‍கை எடுக்‍காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே இஸ்லாமிய அமைப்புகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை தடியடியைக்‍ கண்டித்து முழக்‍கமிட்ட அவர்கள் இஸ்லாமிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. - கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்புக்‍காக ஏராளமான போலீசார் குவிக்‍கப்பட்டிருந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பள்ளிவாசலில் சவப்பெட்டியை வைத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இஸ்லாமியர்கள் பாட்டு பாடி போராட்டம் நடத்தினர். குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தப் போவதில்லை என்பதை உறுதிசெய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினர். கம்பம், போடி பகுதிகளிலும், இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவத்தை கண்டித்து, கும்பகோணம், கொரநாட்டுக் கருப்பூர் புறவழிச்சாலையில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர், இஸ்லாமிய அமைப்புகள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00