குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான அமைதி போராட்டங்களில் அடக்‍குமுறையை ஏவி விடுவது கண்டிக்‍கத்தக்‍கது - டிடிவி தினகரன் எச்சரிக்‍கை

Feb 15 2020 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டங்களில் அடக்குமுறையை ஏவிவிடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், ஆட்சியாளர்களே பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதற்கு காரணமாகிவிடக்கூடாது என எச்சரித்துள்ளார். இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எப்போதும் களத்தில் துணையாக நிற்கும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டைச் செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அமைதி வழியில் நடத்தும் போராட்டங்களில் அடக்குமுறையை ஏவிவிடுவது கண்டிக்கத்தக்கது என்றும் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுவதற்கு அரசாங்கமே காரணமாகிவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை சட்டத்தைத் திருத்தம் செய்துள்ள மத்திய அரசையும் மற்றும் அதனை நாடாளுமன்றத்தில் ஆதரித்து சட்டமாக்குவதற்குத் துணை நின்ற பழனிசாமி அன் கோ-வையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

'குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது' உள்ளிட்ட கோரிக்கைகளை இப்போராட்டங்களில் இஸ்லாமியப் பெருமக்களும், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் முன்வைத்து வருகிறார்கள். இதற்காக தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஜனநாயக நாட்டில் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையைக் கொண்டு அமைதி வழியில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தேவையில்லாமல் தேன்கூட்டில் கை வைப்பது போல் ஆகிவிடும் என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரவர்க்கத்தினரே மக்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பொது அமைதி கெடுவதற்குக் காரணமாகி விடக்கூடாது - சென்னை வண்ணாரப்பேட்டையில் நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது.

மேலும் குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக்கோரி நடைபெறும் போராட்டங்களில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்று தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அதுபோன்றே, இப்பிரச்சினையில் ஜனநாயக வழியில், அமைதியாக போராடும் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்டோருக்கு எப்போதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் களத்தில் துணையாக நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00