பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு

Feb 16 2020 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சுமார் 4 மாதங்களாக, 100 அடியாக நீடித்து வந்த நிலையில், தற்போது நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இதன்மூலம் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகமும் நடைபெறுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம், கடந்த நவம்பர் மாதம் முழு கொள்ளளவை எட்டி, பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்பிடிப்புப் பகுதியில் மழையின் அளவு குறைந்ததாலும், தற்போது கோடைக்‍காலம் தொடங்கவிருப்பதாலும் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00