இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சி.ஏ.ஏ. - என்.பி.ஆர். - என்.ஆர்.சி.யை வாபஸ் பெற வலியுறுத்தல்

Feb 17 2020 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திஜி கலையரங்கத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், சென்னையில் போராட்டத்தின்போது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும், திருப்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழக காவல் துறைக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

இதே போல், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, ஆக்கூரில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற கோரியும், சென்னையில் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இளங்கடையில், முஸ்லீம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெண்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, அரசுக்‍கு எதிராக கண்டன முழக்‍கங்கள் எழுப்பினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், இஸ்லாமிய கூட்டியக்கத்தின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 700க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், ராமநாதபுரம் மாவட்டம் சந்தை திடல் அருகே, எஸ்.டி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00