தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்பு

Feb 17 2020 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாகக்‍ கொண்டாடுவது குறித்தும் அமமுக வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டங்களில், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், வரும் 24ம் தேதி கங்கைகொண்டானில் நடைபெறவுள்ள மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்தக்‍ கூட்டத்தில், நகரச் செயலாளர் திரு.MSK முப்பிடாதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பில், கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், வரும் 24ம் தேதி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நடைபெறவுள்ள அம்மாவின் பிறந்த நாள் விழா பொதுக்‍கூட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு, நூற்றுக்கணக்கான வாகனங்களில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்று சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்‍ கூட்டத்தில், நகரச் செயலாளர்கள் திரு. பிச்சைக்கனி திரு.முருகன், ஒன்றிய செயலாளர்கள் திரு.ராஜேந்திரன், திரு. போஸ். தாமோதரன், திரு. முத்துராமலிங்கம் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், ஸ்ரீவில்லிபுத்தூரில், அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. கங்கைகொண்டானில் நடைபெறவுள்ள அம்மாவின் பிறந்த நாள் விழா பொதுக்‍கூட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு, நூற்றுக்கணக்கான வாகனங்களில் கழக நிர்வாகிகள் தொண்டர்களுடன் சென்று உற்சாக வரவேற்பு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், நகரச் செயலாளர்கள் திரு.செல்வக்கனி, திரு.SPM. மாணிக்கம், திரு.காமாட்சி, ஒன்றிய செயலாளர் ஜான்சன், பேரூர் கழக செயலாளர் மம்சை கணேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாங்க பாளையத்தில், அமமுக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இதில், அமமுக துணை பொது செயலாளர்கள் திரு.பி.பழனியப்பன், திரு.எம் ரங்கசாமி, கழக தலைமை நிலைய செயலாளர் திரு.ஆர் மனோகரன், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.பி.எஸ்.என். தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்‍கு ஆலோசனை வழங்கினர். இக்கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உட்பட மாற்றுக்‍கட்சிகளைச் சேர்ந்த மற்றும் 50-க்கு மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00