குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு : இஸ்லாமியர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டம் - கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்

Feb 18 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையைக்‍ கண்டித்து, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள், பொதுமக்‍கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைக்‍ கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில், 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மத்திய-மாநில அரசுகளுக்‍கு எதிராக முழக்‍கங்கள் எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், காவல்துறையினரின் தாக்‍குதலை கண்டித்தும், சேலம் கோட்டை மைதானம் அருகே இஸ்லாமியப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் தாக்‍கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாமக்‍கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரியும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வண்ணாரப்பேட்டை தாக்‍குதல் சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00